Legends in Music
Thursday, 19.12.2024, 10:54 PM
Welcome Guest | RSS
 
Main Sign UpLogin Guest Book
Carnatic News : Our New Website for Carnatic Music/Vocal/Instrumental/Bhajans/Composers/Lyrics/Ragas has been launched., more easier., more faster., more downloads., Click Here »
Site menu
Vote For Me
Rate for Site
Total of answers: 694
Statistics

Total online: 2
Guests: 2
Users: 0
Main » 2013 » August » 21 » விஷாகா ஹரி ஸ்ரீ கிருஷ்ண லீலை கதை
0:53 AM
விஷாகா ஹரி ஸ்ரீ கிருஷ்ண லீலை கதை
விஷாகா ஹரி ஸ்ரீ கிருஷ்ண லீலை கதை

தனது வழக்கமான் புன்னகையோடு விஷாகா ஹரி 6-45க்குஸ்ரீ கிருஷ்ண லீலை கதையை சொல்ல ஆரம்பித்தார். தியாகராஜரின் பிரபல "ஸாமஜ வர கமனா” (ஹிந்தோளம்) பாட்டுடன் ஆரம்பித்தார். உக்ரஸேனனின் மகனான கம்ஸன் எவ்வாறு தன் தங்கை தேவகியின் முதல் ஆறு குழந்தைகளை கொன்றான் என சொல்லிவிட்டு, ஏழாவது குழந்தை பலராமனாக அவதரித்ததை விளக்கினார்.

எட்டாவதாக ஸ்ரீவிஷ்ணுவே கிருஷ்ணனாக தேவகியின் கர்ப்பத்தில்அவதரித்ததையும், ஆவணி மாஸம் ரோஹிணி நக்ஷத்திரம், அஷ்டமி திதியில் அவர் பிறந்ததையும் அவர் சொன்னபோது அரங்கமே அமைதியாக காது கொடுத்து கேட்டது.

இவ்வளவு அழகான குழந்தையை கம்ஸனிடம் சாக கொடுக்கவேண்டுமா, ”என்னையும் என் குழந்தையையும் ஏன் நீ காப்பாற்ற கூடாது?” என தேவகி பகவானிடம்"உனக்கு நான் பாரமா?” அழுதபோது, அரங்கமே நிஸப்தமாக இருந்தது.

பின்பு, வஸுதேவர் குழந்தையை கோகிலத்தில் யஸோதாவிடம் விட்டுவிட்டு வந்ததும், வஸுதேவரும் ய்ஸோதையும் குழந்தையை கொஞ்சியதை பாட ஆரம்பித்தார் - ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து " அத்புதம் பாலகம்” என ஆரம்பிக்கும் இந்த ஸ்லோகம் இதோ:

தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் 
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம் 
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் கலசோபிகௌஸ்துபம் 
பீதாம்பரம் ஸாந்த்ரபயோதஸௌபகம் 

மஹார்ஹ வைடூர்ய கிரீடகுண்டல- 
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தலம் 
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி: 
விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத 

( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு, 
கவுத்துவம், வனமாலை தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி- 
குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம். வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்) 

ஏன் அற்புதம் என்னும் அடைமொழி? 


அவதரிக்கும்போதே ‘தர்ஹி மாம் கோகுலம் நய’ (என்னை கோகுலம் எடுத்துச் செல்) என்று தகப்பனுக்கு ஆணையிட்டதால், அம்புலிப்பருவத்தில் அசுரரை மாய்த்ததால், காளியன் செருக்கை அடக்கியதால், குரவை கோத்ததால், மதுரையில் காட்டிய மாவீரத்தால், வெஞ்சொல் தந்தவனுக்கும் வீடு தந்ததால், பஞ்சவரைப்பல வகையிலும் காத்ததால், போர்க்களத்தில் ப்ரம்மவித்தை பகர்ந்ததால், பகல் நடுவே இரவழைத்ததால், இன்னும் பல ஆனைத்தொழில்களால், துவாரகை என்ற பொன்னகர் பொங்கும் கடலினுள் புகுந்ததையும் ஒட்டுதல் இல்லாமல் புன்முறுவலோடு ஏற்றதால் 

இந்த ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் விஷாகா தன் இன்னிசையால் விளக்கும்போது, ஓ என்ன ஒரு தெய்வீகமான சூழ்நிலை; கேட்க கொடுத்திருக்க வேண்டும்.

கண்ணன் செய்த பல லீலைகளில் மூன்றை மட்டும் விஷாகா இன்று எடுத்துக் கொண்டார். முதலில்,வெண்ணெய் திருடியது. .

கோபிகைகள் கண்ணனைக் குறித்து யஸோதையிடம் குறை கூறியது பற்றி ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்பாடலை விஷாகா ஹரி தன் தேன் குரலால் பாடிய போது எல்லாரும் கூட சேர்ந்து பாடினார்கள்.
.
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்

பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முத்தமிட்டானடி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி (தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்

அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைப் பார்க்கும் வேளையிலே வாய்திறந்து
இந்திர ஜாலம் போலவே ஈரேழுலகம் காண்பித்தான் (தாயே)

இரண்டாவது லீலையாக அவர் எடுத்துக் கொண்டது - கண்ணனை யஸோதா உரலில் வைத்துக் கட்டியது.

எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனாலும் விஷாகா தன் இன்னிசையால் அதைச் சொல்லும்போது நம் கண்கள் பனிக்கின்றன. ஈரேழு உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு-இறப்பு தளைகளை அறுத்தெரிக்கும் சாக்ஷாத் பகவானை தாம்புக் கயிற்றால் கட்டி, அவனை வாய் பொத்தி நிற்க வைத்த யசோதாவை பார்த்து பிரமனும், தேவர்களும் மற்றவர்களும் வியந்து பாடுகின்றனர் --

என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரப்ரம்மம் அம்மா என்றழைக்க
(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையிலேந்தி சீராட்டிப் பாலூட்டித் தாலாட்ட
(என்ன தவம்)

சரகாதியர் தவ யோகம் செய்து
வருந்தி சாதித்ததை புனித மாதே எளிதில் பெற
(என்ன தவம்)

பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள (கண்ணனை)
உரலில் கட்டி வாய்பொத்திக் கெஞ்சவைத்தாய் தாயே
(என்ன தவம்)

[பாபநாசம் சிவன்]
Views: 1876 | Added by: Venkat | Tags: legendsinmusic.ucoz.com, Harikada, Thaye Yesoda, Carnatic music, Krishna leela, Vishaka Hari | Rating: 5.0/1
Total comments: 9
9 s.krishnasamy  
0
sri krishna's BALYA LEELAI from wonderful devotee.

8 e r rajagopalan  
0
An excellent Pravachan with Sangeetha Mazhai

7 Ramamani Iyer  
0
I am at a loss in words to express my involvement in the discourse.

6 S.NARAYANAN  
0
EXCELLENT

5 R SRINIVASAN  
0
Real Treat

4 Santhanaraman.V  
0
Super.

3 K SUNDARESAN  
0
EXCELENT

2 K SUNDARESAN  
0
EXCELLENT

1 santhanaraman gopalakrishnan  
0
EXCELLENT!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Only registered users can add comments.
[ Sign Up | Login ]
Login form
Search
Latest Updates
Calendar
«  August 2013  »
SuMoTuWeThFrSa
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Entries archive
ADS

Tribute Pages

Discourse Pages

Learn Music

Music Therapy