உலக சாதனையாளர் அப்துல் ஹலீம் தயாரித்த "தி பீட் வேல்டு” மற்றும்
"செபிர் சோன்” இசைக்குறும்படங்கள் ஜுலை மாத இறுதியல் நடைபெறும் கன்னியாகுமாரி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன.
"தி பீட் வேல்டு” இசைக்குறும்படம்
"செபிர் சோன்” இசைக்குறும்படம்
"தி.பீட் வேல்டு” தயாரிப்பு, இசை மற்றும் நடிப்பு – அப்துல் ஹலீம். இந்த இசைக்குறும்படம் கடம், கஞ்சிரா, ஜெம்பே, வயலின், கப் மற்றும் தேங்காய் சிரட்டை பயன்படுத்தி இசையமைக்கப்பட்டது. உலக அளவில் புகழ்பெற்ற இந்த இசைக் குறும்படம் அமெரிக்காவில் நடைபெற்ற "சைபர் ஹம் ஸ்பிரிங் இன்டூ ஸம்மர்” சர்வேதச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்த்து தந்தது.
"செபிர் சோன்” தயாரிப்பு, இசை
மற்றும் நடிப்பு – அப்துல் ஹலீம். இந்த இசைக்குறும்படத்தில் அப்துல் ஹலீம் அவர்கள் விவசாயியாக நடித்துள்ளார். இந்த இசைக்குறும்படம் உலகின் ஒரு மிகப்பழமையான "கடம்” எனும் இசைக்கருவியை கொண்டு இசையமைக்கப்பட்டுள்ளது.
அப்துல் ஹலீம்
உலக சாதனையாளர் அப்துல் ஹலீம் கடம், டாம்பரின், ஜெம்பே, செண்டை மற்றும் உடுக்கு போன்ற இசைக்கருவிகளில் 6 உலக சாதனைகளை படைத்துள்ளார். இசையில் எம்.பில். பட்டம் பெற்றுள்ள இவர் தனது 17 மாணவர்களையும் உலக சாதனை படைக்க வைத்துள்ளார்.
"அகில இந்தய வானொலி” நிலையத்தில் "A” கிரேடு (முதல்நிலை) இசைக்கலைஞரான இவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் பல புகழ் பெற்ற இசை மேதைகளுடன் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் தமிழக அரசின் "கலைவளர்மணி”, நாதலயமணி, நாதலயஅரசு, சிறந்த இசைக்கலைஞன்’, சுவாமி விவேகானந்தா போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.